திங்கள், 17 ஜனவரி, 2011

தமிழர்களின் மனம்

தமிழர்களின் மனம்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா......!!??
அந்தமானில் வேலை செய்கின்ற சில மெத்த படித்தவர்கள், தமிழ் நாட்டில் பெரிய கான்வென்ட்களில் தயாரானவர்களாக இருக்கிறார்கள்। மிகச்சிறு வயதிலிருந்தே ஆங்கிலத்தில் நன்றாக பேசிப் பழகியிருந்ததால் அதை ஓர் அன்னிய மொழி போலவே நினைக்காமல் அசட்டையாக பேசி விடுகிறார்கள்। இவர்கள் தங்களுக்குள் சாதாரணமாகப் பேசிக்கொள்ளும் போதுகூட தமிழ் கலந்த ஆங்கிலத்தில்தான் உரையாடுகின்றனைர்। இந்நிலை அந்தமானில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும்தான்।
அவர்களுடைய ஆங்கிலப் பேச்சின் வேகமும், லாவகமும், நளினமான ஸ்டைலும், யாராலும் புரிந்து பின்பற்ற முடியாததாக இருக்கிறது।
அவர்களோடு சரிசமமாக ஆங்கிலம் பேசமுடியாது என்று அவர்கள் நினத்துக் கொள்கிறார்கள்। ஆனால் தம் தாய் மொழியான தமிழ் மொழியில் பேச எழுதத் தெரிந்தும் தமிழ் மொழியைப் பேசுவதில்லை;எழுதுவதில்லை। அப்படியே பேசினாலும் பிழையாக பேசுகிறார்கள்। ழ,ல,ள உச்சரிப்பினைப் பற்றியே அவர்கள் கவலைப் படுவதில்லை। அதே சமயம் ஆங்கில உச்சரிப்பைப் பற்றி அருமையாக பாடம் நடத்துகிறார்கள்। २६ எழுத்துகளைக் கொண்டு ஆங்கிலேயன் எப்படியெல்லாம் தன் மொழியை வளமாக மார்ரியிருக்கிறான்। தமிழ் தமிழ் என்று ஏம்பா சாகிறீங்க। உங்களைப் போல ஆட்களாலதான் தமிழ் மொழி வளர்ரதில்ல....
எப்போதேனும் என்னைப்போன்றவர்கள், இந்த ஆங்கிலக் கனவான்கள் அல்லது சீமாட்டிகளிடம் மாட்டிக்கொண்டுவிட்டால் எங்களின் நிலைமை கவலைக்கிடமாகிவிடும்। அவர்களிடம் நாம் தமிழில் ஏதேனும் கேட்டுவிட்டால் ஏதோ தீராத நோயாளியை பார்ப்பது போல ஒரு பார்வை
அடப் பாவமே, உனக்கு இங்கிலீஷ் தெரியாதா?’ என்றுஅலட்சியத்துடன் பார்த்துச் சிரிப்பது இன்னும் கொடுமையாக இருக்கும்। என் வாழ்வில் நீநீநீ.............ண்...........ட.......... நாட்களுக்கு முன்பு அதாவது १९७५ ஆம் ஆண்டில் எனக்கு வேலை கிடைத்தது। மருத்துவச் சான்று (மெடிக்கல் பிட்னஸ்) பெறுவதற்காக அரசு மருத்துவமனைக்கு அந்தமான் மாவட்ட தி.மு.க.செயலர் திரு அ. இரா. மருதவாணன் அவர்கள் எங்களை (நான், பழ. முருகு) அழைத்துச் சென்றார்। நான் எப்போதும் அண்ணன் மருதவாணன் அவர்களுடனே இருப்பேன்।
(தொடரும்)